நெல்லை: பூட்டிய வீட்டில் முதியவர் பிணம்

பூட்டிய வீட்டில் முதியவர் பிணமாக கிடந்தார்
நெல்லை: பூட்டிய வீட்டில் முதியவர் பிணம்
Published on

நெல்லை:

நெல்லை மேலப்பாளையம் குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் லாசர் (வயது 62). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி விக்டோரியா (52). இவர்கள் 2 பேரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தனர். இந்த நிலையில் லாசரின் வீடு கடந்த சில நாட்களாக திறக்கப்படாமல் இருந்தது. மேலும் அவரது வீட்டில் இருந்து நேற்று முன்தினம் துர்நாற்றம் வீசியது. உடனே அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று, லாசரின் வீட்டின் கதவை உடைத்து திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு லாசர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com