முதியவர் விஷம் குடித்து தற்கொலை

முதியவர் விஷம் குடித்து தற்கொலை

கந்திகுப்பம் அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டார்.
Published on

பர்கூர்,

கந்திகுப்பம் அடுத்த மணியம்பாறை கிராமத்தை சேர்ந்தவர் ஜான் (வயது 72). இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த முதியவர் சம்பவத்தன்று விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கந்திகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com