வாகனம் மோதி முதியவர் சாவு

வாலாஜா அருகே வாகனம் மோதி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வாகனம் மோதி முதியவர் சாவு
Published on

வாலாஜா

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த வெட்டுவாணத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 73). இவர், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே உள்ள புலித்தாங்கல் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

படுகாயம் அடைந்த கார்த்திகேயன் வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது தொடர்பாக வாலாஜா போலீசில் அவரது மகன் கண்ணன் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்குப் பின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com