பழனி அருகே முதியவர் அடித்துக் கொலை

பழனி அருகே முதியவர் அடித்துக் காலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது உறவினரை போலீசார் கைது செய்தனர்.
பழனி அருகே முதியவர் அடித்துக் கொலை
Published on

பழனி:

பழனி அருகே உள்ள எரமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 65). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கதிர்வேல் (55). இவர்கள் 2 பேரும் உறவினர்கள். இதற்கிடையே பழனியப்பனுக்கும், கதிர்வேலுக்கும் இடையே வீட்டின் முன்புள்ள சாக்கடை கால்வாய் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று காலை அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த கதிர்வேல், பழனியப்பனை தாக்கி, தள்ளிவிட்டார். இதில் கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து பழனியப்பனை, அவரது குடும்பத்தினர் தூக்கியபோது அவர் சம்பவ இடத்திலேயே இறந்துபோனது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆயக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பழனியப்பனின் உடலை பேலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கதிர்வேலை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com