மின்சாரம் பாய்ந்து ரெயில்வே ஊழியரின் மனைவி சாவு

மின்சாரம் பாய்ந்து ரெயில்வே ஊழியரின் மனைவி சாவு
மின்சாரம் பாய்ந்து ரெயில்வே ஊழியரின் மனைவி சாவு
Published on

திருச்சி, கே.கே.நகர், எல்.ஐ. சி. காலனி, பழனி நகரை சேர்ந்தவர் பால மோகன். திருச்சி ரயில்வே சொசைட்டியில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி மேதினி (44). இவர் நேற்று மதியம் வீட்டின் முன்புறம் உள்ள செடிகளை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, அதன் அருகில் இருந்த மின் கம்பியை தொட்டார். அப்போது, அதில் இருந்த வந்த மின்சாரம் அவரது உடலில் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் கே.கே. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com