மின்வாரிய ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

செங்கல்பட்டு அருகே மின்வாரிய ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மின்வாரிய ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பெரியார் தெருவை சேர்ந்தவர் நடராஜ் (வயது 47). அவர் திருமழிசையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு கடந்த 4 ஆண்டுகளாக தோல் நோய் மற்றும் தீராத வயிற்று வலியால் அவதிக்குள்ளாகி வந்தார்.

இதற்காக பல இடங்களில் சிகிச்சையும் பெற்று வந்த நடராஜ் மனம் உடைந்து நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இவருக்கு புவனேஷ்வரி என்ற மனைவியும், லோகேஷ் (17) என்ற மகனும், ஹேமாவதி (13) என்ற மகளும் உள்ளனர். இது தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com