மின்சாரம் பாய்ந்து ஊழியர் படுகாயம்

போடி அருகே மின்சார கம்பத்தில் ஏறி வேலை பார்த்து கொண்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து ஊழியர் ஒருவர் படுகாயம் அடைந்தனர்.
மின்சாரம் பாய்ந்து ஊழியர் படுகாயம்
Published on

போடி:

போடி ஜக்கம்மநாயக்கன்பட்டி கம்பர் தெருவை சேர்ந்தவர் அழகர்சாமி மகன் காளிதாஸ் (வயது 21). இவர் போடி நகர் மின் வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். நேற்று போடி-தேவாரம் சாலையில் சில்லமரத்துப்பட்டி அருகே உள்ள பகுதியில் மின் கம்பத்தில் ஏறி வேலை செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com