மோட்டார் சைக்கிள் மோதியதில் என்ஜினீயரிங் மாணவர் சாவு

ஆம்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் என்ஜினீயரிங் மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிள் மோதியதில் என்ஜினீயரிங் மாணவர் சாவு
Published on

ஆம்பூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மின்னூர் ஊராட்சி ரயில்வே ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார் (வயது 22), என்ஜினீயரிங் படித்து வந்தார். இவர், மின்னூரில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை மோட்டார் சைக்கிளில் கடந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார்சைக்கிள் திடீரென மதன்குமார் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயரிழந்தார்.

இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com