செஞ்சி அருகே, என்ஜினீயரிங் மாணவி, தூக்குப்போட்டு தற்கொலை - காரணம் என்ன? போலீஸ் விசாரணை

செஞ்சி அருகே என்ஜினீயரிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செஞ்சி அருகே, என்ஜினீயரிங் மாணவி, தூக்குப்போட்டு தற்கொலை - காரணம் என்ன? போலீஸ் விசாரணை
Published on

செஞ்சி,

செஞ்சி அருகே உள்ள காரை கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன் மகள் சுமித்ரா(வயது 19). இவர் மேல்மலையனூர் அருகே உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த சுமித்ரா வீட்டில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு கொண்டார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது, சுமித்ரா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பூபாலன் கொடுத்த புகாரின்பேரில் அனந்தபுரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூவராகவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுமித்ரா உடல் நலக்கோளாறு காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com