

தர்மபுரி,
தமிழக அரசின் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து நேற்று மதியம் கார் மூலம் கிருஷ்ணகிரிக்கு சென்றார்.
தர்மபுரி மாவட்டம் வழியாக சென்ற முதல்-அமைச்சருக்கு தர்மபுரியை அடுத்த குண்டலப்பட்டியில் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கலெக்டர் விவேகானந்தன் ஆகியோர் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் பூங்கொத்து வழங்கியும், பொன்னாடை போர்த்தியும் முதல்-அமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கையுடன் வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், மாவட்ட பொருளாளர் நல்லதம்பி, முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் டி.ஆர்.அன்பழகன், முன்னாள் நகராட்சி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிங்காரம், குப்புசாமி, மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் வேலுமணி, நிர்வாகிகள் பழனிச்சாமி, பரமசிவம், கோவிந்தசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி, கூட்டுறவு பணியாளர் சங்க மாநில தலைவர் சின்.அருள்சாமி உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.