திருவாலங்காடு அருகே வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

திருவாலங்காடு அருகே குளிர்சாதன வேன் தீப்பிடித்து முழுவதுமாக எரிந்தது.
திருவாலங்காடு அருகே வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
Published on

சென்னை தாம்பரத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் காவனூர் பகுதியில் இயங்கும் தனியார் இரும்பு உருக்காலைக்கு திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவுக்கு உட்பட்ட திருவாலங்காடு வழியாக குளிர்சாதன வேன் சென்று கொண்டிருந்தது. அதில் 5 தொழிலாளர்கள் இருந்தனர். திருவாலங்காடு அடுத்த வியாசபுரம் பஞ்சாயத்து கூண்டரிகபுரம் என்ற இடத்தில் செல்லும்போது திடீரென வேன் தீப்பற்றி முழுவதுமாக எரிந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

வேனை ஓட்டி வந்த திருமூர்த்தி (வயது 29) வேனில் இருந்த 5 தொழிலாளர்களை இறக்கி அவர்களை காப்பாற்றினார். மேலும் சாலையில் ஓரமாக நிறுத்தியவுடன் முழுவதுமாக தீப்பற்றி எரிந்தது. இதனால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com