குடும்பத்தகராறு காய்கறி வியாபாரி தீக்குளித்து தற்கொலை

குடும்பத்தகராறு காரணமாக காய்கறி வியாபாரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
குடும்பத்தகராறு காய்கறி வியாபாரி தீக்குளித்து தற்கொலை
Published on

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அடுத்த கம்மார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிவா (வயது 38). இவர் சென்னை கோயம்பேட்டில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு அமுதா(35) என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். கடந்த 25-ந்தேதி சிவாவுக்கும் அவரது மனைவி அமுதாவுக்கும் குடும்பத்தகராறு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் மனம் உடைந்த சிவா, வீட்டில் தனியாக இருந்தபோது தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயம் அடைந்த சிவா, சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com