பாலாற்று வெள்ளத்தில் சிக்கிய விவசாயி பிணமாக மீட்பு

பாலாற்று வெள்ளத்தில் சிக்கிய விவசாயி பிணமாக மீட்பு
பாலாற்று வெள்ளத்தில் சிக்கிய விவசாயி பிணமாக மீட்பு
Published on

துவரங்குறிச்சி, நவ.30-
துவரங்குறிச்சியை அடுத்த தெத்தூரை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 73). விவசாயியான இவருக்கு பாலாற்று அருகே தோட்டம் உள்ளது. கடந்த 26-ந்தேதி தோட்டத்திற்கு சென்ற லட்சுமணன் மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் நேற்று அவர் பாலாற்றில் பிணமாக மிதந்தார். தோட்டத்துக்கு செல்லும் போது, பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com