

ஹாசன்:
ஹாசன் தாலுகா தொட்டப்புரா கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மகவுடா (வயது 58). விவசாயி. இவர் ஹாசன் அருகே அரிசிகெரே சாலையில் கிருஷ்ணா நகரில் உள்ள கடைக்கு செல்ல சாலையை நடந்து கடக்க முயன்றார். அப்போது அந்த சாலையில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நரசிம்மகவுடா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஹாசன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.