வாகனம் மோதி விவசாயி சாவு

பணகுடி அருகே வாகனம் மோதி விவசாயி இறந்தார்.
வாகனம் மோதி விவசாயி சாவு
Published on
Updated on

பணகுடி, மார்ச்:

களக்காட்டை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 63). விவசாயி. இவர் நேற்று மதியம் பணகுடியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்து விட்டு மோட்டார் சைக்கிளில் ரோஸ்மியாபுரம் அருகே வடக்கு நோக்கி மெயின்ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த மினிவேன் கந்தசாமி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மினிவேன் டிரைவரான நாகர்கோவில் வடசேரியை சேர்ந்த மணி மகன் வேல்முருகன் (26) என்பவரை கைது செய்து மினி வேனை பறிமுதல் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com