விவசாயி தற்கொலை

விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
விவசாயி தற்கொலை
Published on

களக்காடு:

களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூர் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் (வயது 60). விவசாயி. இவருக்கு பொன்னுத்தாய் என்ற மனைவியும், 4 மகன்களும், 1 மகளும் உள்ளனர். தங்கவேலுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் மதுக்குடிக்க குடும்பத்தினரிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் குடும்பத்தினர் பணம் கொடுக்க மறுத்ததுடன், மது குடிக்கும் பழக்கத்தையும் கண்டித்தனர்.

இதனால் மனம் உடைந்த தங்கவேல் வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். அவரை உறவினர்கள் மீட்டு களக்காட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி தங்கவேல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து களக்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com