வீட்டின் மாடியில் இருந்து விழுந்த 4 வயது குழந்தை படுகாயம்

சென்னை அமைந்தகரை, வீட்டின் மாடியில் இருந்து விழுந்த 4 வயது குழந்தை படுகாயம் அடைந்தனர்.
வீட்டின் மாடியில் இருந்து விழுந்த 4 வயது குழந்தை படுகாயம்
Published on

பூந்தமல்லி,

சென்னை அமைந்தகரை, எம்.எம்.டி.ஏ. காலனி, பி.பிளாக் பகுதியை சேர்ந்தவர் ஞானவேல் (வயது 28). கார் டிரைவர். இவருக்கு 4 வயதில் தேவசேனா என்ற மகள் உள்ளார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் முதல் மாடியில் விளையாடி கொண்டிருந்த குழந்தை தேவசேனா, எதிர்பாராதவிதமாக கால் தவறி அங்கிருந்து கீழே விழுந்துவிட்டது.இதில் தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த குழந்தையை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com