கிணற்றில் தவறி விழுந்த பெண் சாவு

உத்திரமேரூர் பேரூராட்சி, கிணற்றில் துணி துவைக்க சென்ற பெண் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
கிணற்றில் தவறி விழுந்த பெண் சாவு
Published on

உத்திரமேரூர்,

உத்திரமேரூர் பேரூராட்சி வேடபாளையத்தை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 39). திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இவருக்கு ஒரு மகள் உள்ளார். நேற்று மாலை மகேஸ்வரி வயலில் உள்ள கிணற்றில் துணி துவைப்பதற்காக சென்றார்.

அப்போது கால் வழுக்கி திடீரென கிணற்றில் விழுந்தவர் நீச்சல் தெரியாததால் கிணற்றில் மூழ்கினார்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com