தடுப்புக்காவல் சட்டத்தில் பெண் சாராய வியாபாரி கைது

தடுப்புக்காவல் சட்டத்தில் பெண் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டார்.
தடுப்புக்காவல் சட்டத்தில் பெண் சாராய வியாபாரி கைது
Published on

விழுப்புரம்,

மரக்காணம் செல்லன் தெருவை சேர்ந்தவர் துரை மனைவி ரூபாவதி (வயது 50). இவர் மீது மரக்காணம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சாராயம் கடத்தியதாகவும், விற்பனை செய்ததாகவும் பல்வேறு வழக்குகள் உள்ளன.

கடந்த சில வாரத்திற்கு முன்பு சாராய வழக்கில் ரூபாவதியை மரக்காணம் போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர் சாராய வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் ரூபாவதியை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார். இதையடுத்து ரூபாவதியை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், வேலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com