ராயக்கோட்டை அருகே பெண் மர்ம சாவு - உதவி கலெக்டர் விசாரணை

ராயக்கோட்டை அருகே பெண் மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
ராயக்கோட்டை அருகே பெண் மர்ம சாவு - உதவி கலெக்டர் விசாரணை
Published on

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள பழையூரை சேர்ந்தவர் பெருமாள். விவசாயி. இவருடைய மனைவி நதியா (வயது 27). இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று நதியா வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த ராயக்கோட்டை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அவர்கள் நதியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே நதியாவின் தந்தை தனகோட்டி ராயக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் தனது மகளின் சாவில் சந்தேகம் உள்ளது எனக் கூறியுள்ளார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நதியாவிற்கு திருமணம் 6 ஆண்டுகளே ஆவதால் இந்த சம்பவம் குறித்து ஓசூர் உதவி கலெக்டர் விமல்ராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com