அரூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

அரூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
அரூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
Published on

அரூர், மே.18-

அரூர் அருகே குடும்ப தகராறில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாயார் போலீசில் புகார் செய்துள்ளார்.

குடும்ப தகராறு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள சின்னாகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். இவருடைய மனைவி கல்பனா (வயது 30). இவர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவன்-மனைவியிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் கணவரிடம் கோபித்து கொண்டு கல்பனா சேலத்தில் உள்ள பெற்றோ வீட்டில் ஒரு ஆண்டாக வசித்து வந்தார்.

இதையடுத்து ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கடந்த 15 நாட்களுக்கு முன்பு கல்பனா தனது கணவர் வீட்டிற்கு வந்தார். இந்த நிலையில் அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கல்பனா வீட்டில் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார்.

சாவில் சந்தேகம்

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கல்பனா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கல்பனாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தாயார் கோபிநாதம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்பனா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com