

பழைய மொபைல் போன்கள், கணினிகள் மற்றும் மின் சாதன பொருட்கள் என்று மண்ணோடு மக்காத பொருட்களால் பூமிக்கு ஆபத்து ஏற்படும். ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆய்வாளர்கள் இதற்கு ஒரு தீர்வை கண்டுபிடித்துள்ளனர். எங்கு வேண்டுமானாலும் இயங்கக்கூடிய ஒரு சிறிய மைக்ரோ தொழிற்சாலையை உருவாக்கியுள்ளனர். ஸ்மார்ட் சென்டர் என்று இதனை பெயரிட்டு அழைக்கின்றனர். வெறும் ஐம்பது சதுர அடி பரப்பளவில் இயங்கும் இதில் ஒரு சிறிய உலை இருக்கிறது.
இது மின் சாதன பொருட்களை சிறு துண்டுகளாக உடைத்து அதில் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை தனியே பிரித்து சிறிய இழைகளாக மாற்றுகிறது. அவைகளை கொண்டு முப்பரிமாண பிரிண்டிங் செய்ய முடியும். பிரிக்கப்பட்ட உலோகத் துண்டுகளைக் கொண்டு புதிய பொருட்களை தயாரிக்கலாம். இது பழைய பொருட்களை மறுசுழற்சி செய்வது மட்டுமின்றி புதிய வணிக வாய்ப்புகளையும் உருவாக்கி தரும் என்று ஸ்மார்ட் சென்டர் நிறுவனத்தின் மேலாளர் கூறுகிறார்.