ஆலந்தலையில் தூண்டில் வளைவு அமைக்கக்கோரி மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

ஆலந்தலையில் தூண்டில் வளைவு அமைக்கக்கோரி, மீனவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து உள்ளனர்.
ஆலந்தலையில் தூண்டில் வளைவு அமைக்கக்கோரி மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
Published on

திருச்செந்தூர்,

திருச்செந்தூரை அடுத்த ஆலந்தலையில் 160 நாட்டுப்படகுகள் மூலம் சுமார் 1,000 மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இதன்மூலம் சுமார் 3 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பை பெறுகின்றனர். தற்போது உடன்குடியில் அனல் மின்நிலையம் அமைக்கும் பணிக்காக, ஆலந்தலைக்கு தென்பகுதியில் கல்லாமொழி கடலில் நிலக்கரி இறங்குதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனால் ஆலந்தலையில் கடல் அரிப்பு அதிகமாக உள்ளது. கடற்கரையில் உள்ள குடியிருப்புகளை நோக்கி, கடல் அலைகள் வேகமாக அரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்துடனே உள்ளனர்.

தூண்டில் வளைவு

இதையடுத்து ஆலந்தலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் ஆய்வு நடத்தி, இங்கு கடலில் ரூ.48 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு அமைக்க மாதிரி வரைபடம் தயாரித்து, அரசுக்கு பரிந்துரை செய்ததாக தெரிகிறது.

தற்போது வடக்கில் இருந்து வீசும் வாடைக்காற்று பருவநிலை மாற்றத்தால் அடுத்த மாதம் (மார்ச்) இறுதியில் இருந்து தெற்கில் இருந்து வீசத்தொடங்கும். இதனால் கடல் நீரோட்டத்தில் மாறுதல் பெற்று, கடல் அரிப்பு அதிகமாகும். எனவே ஆலந்தலை கடலில் விரைவில் தூண்டில் வளைவு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளை தொடங்கி நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

காலவரையற்ற வேலைநிறுத்தம்

மேலும் இதுகுறித்து ஆலந்தலை கிராம மக்கள், சென்னையில் முதல்-அமைச்சரை இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் சந்தித்து வலியுறுத்த புறப்பட்டு சென்று உள்ளனர்.

இதையொட்டி ஆலந்தலையில் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com