

நாகர்கோவில்,
நிவாரணம் கிடைக்காத மீனவர்கள் மீன்வளத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சிறப்பு நிவாரணம்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தபடி தமிழ்நாடு மீன்வளத்துறை மூலம் மீனவர் நல வாரிய உறுப்பினர்களுக்கு தலா ரூ.1000 வீதம் சிறப்பு நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தில் உள்நாட்டு மீன்வளத்துறை உதவி இயக்குனர் கட்டுப்பாட்டில் பதிவு செய்யப்பட்ட மீனவர் நலவாரிய உறுப்பினர்கள் தங்களது வங்கி கணக்கில் மீனவர் நலவாரியம் மூலம் ரூ.1000 கிடைக்க பெறவில்லை எனில் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.
25-ந் தேதிக்குள்...
மேலும் உதவித்தொகை பெற நல வாரிய அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் வங்கி விவரங்களை 25-ந் தேதி மாலை 5 மணிக்குள் நாகர்கோவில் வடசேரி ஆம்னி பஸ் நிலையம் முன் அமைந்துள்ள மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.