நொய்யல் பகுதியில் பூக்கள் விலை உயர்வு

நொய்யல் பகுதியில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.
கரூர்
கரூர்
Published on

நொய்யல்,

நொய்யல், கவுண்டன்புதூர், பேச்சிப்பாறை, நடையனூர், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், கொங்கு நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பூக்களை பயிர் செய்துள்ளனர். பின்னர் பூக்கள் பூத்தவுடன் உள்ளூர் வியாபாரிகளுக்கும், ஏல சந்தைகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.650-க்கும், சம்பங்கி கிலோ ரூ.220-க்கும், அரளி கிலோ ரூ.340-க்கும், ரோஜா கிலோ ரூ.250- முல்லைப் பூ கிலோ ரூ.800-க்கும், செவ்வந்திப்பூ ரூ.280-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும் ஏலம் போனது. கோவில் விசேஷங்களை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com