பெண்ணிடம் கவரிங் சங்கிலி பறிப்பு

முக்கூடலில் பெண்ணிடம் கவரிங் சங்கிலியை மர்மநபர் பறித்துச் சென்றார்.
பெண்ணிடம் கவரிங் சங்கிலி பறிப்பு
Published on

முக்கூடல்:

முக்கூடல் சுப்பையா தெருவை சேர்ந்த பொன்னுசாமி நாடார் மனைவி பொன்மணி. இவர் தனது வீட்டு வாசலில் எப்போதும் உட்கார்ந்து கொண்டிருப்பார். இதை நோட்டமிட்ட மர்மநபர் நேற்று மாலை திடீரென அவரது கழுத்தில் கிடந்த கவரிங் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டான். ஆனால் அந்த சங்கிலி, தங்கம் என்று நினைத்து பறித்துக்கொண்டு கொள்ளையன் ஓடிவிட்டான். ஏற்கனவே இதே வீட்டில் அவரது மருமகள் சில வருடங்களுக்கு முன்பு வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தபோது தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடினான் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து முக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com