திருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

திருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் பட்டதாரி வாலிபர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் ஜோதி நகர் 5-வது தெருவில் வசித்து வந்தவர் பிரவீன் (வயது 30). பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ள இவர், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த அவரது பெற்றோர், தீவிரமாக பெண் பார்த்து வந்தனர். ஆனால் பிரவீன், திருமணத்துக்கு மறுத்து வந்தார். ஆனாலும் அவரது பெற்றோர், அவரை திருமணம் செய்துகொள்ளும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த பிரவீன், வீட்டில் உள்ள தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த சாத்தாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையிலான போலீசார் தற்கொலை செய்து கொண்ட பிரவீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com