ஆசனூ அருகே வனப்பகுதியில் காட்டுத்தீ

ஆசனூ அருகே வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது.
ஆசனூ அருகே வனப்பகுதியில் காட்டுத்தீ
Published on

தாளவாடி

சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதி தற்போது கடும் வறட்சியில் உள்ளது. இதனால் வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் காய்ந்து காணப்படுகிறது. போதிய அளவு உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் வனவிலங்குகள் ஊருக்குள் புகுவது தொடர்கதை ஆகிவருகிறது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் காட்டுத்தீ பற்ற தொடங்கி உள்ளது.

ஆசனூர் வனச்சரகத்துக்கு உள்பட்ட அரேபாளையம் பிரிவு வனப்பகுதியில் நேற்று மாலை 4 மணி அளவில் காட்டுத்தீ பற்றியது. தீ மளமளவென பற்றி எரிந்தது. இதை பார்த்த சிலர் ஆசனூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் 2 ஏக்கர் பரப்பளவு உள்ள மரம், செடி-கொடிகள் எரிந்து நாசம் ஆனது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com