கூடங்குளம் அருகே முன்னாள் ஊராட்சி தலைவி தூக்குப்போட்டு தற்கொலை

கூடங்குளம் அருகே முன்னாள் ஊராட்சி தலைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கூடங்குளம் அருகே முன்னாள் ஊராட்சி தலைவி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

கூடங்குளம், பிப்.28-

கூடங்குளம் அருகே விஜயாபதி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி சகாய பெட்லின் எஜித்தின் (வயது 50). இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டதாகவும், அதற்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூடங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com