வீட்டில் சாராயம் பதுக்கிய பெண்கள் உள்பட 4 பேர் கைது மோட்டார் சைக்கிள் பறிமுதல்

திருக்குவளை அருகே வீட்டில் சாராயம் பதுக்கிய பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
வீட்டில் சாராயம் பதுக்கிய பெண்கள் உள்பட 4 பேர் கைது மோட்டார் சைக்கிள் பறிமுதல்
Published on

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் திருக்குவளை போலீஸ் சரகம், முத்தரசபுரம் கீழத்தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விற்பனைக்காக சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சுந்தரமூர்த்தி மனைவி ராமு (வயது 39) என்பவரது வீட்டில் சோதனையிட்டனர். அப்போது வெளிமாநில சாராயம் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

4 பேர் கைது

இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ராமு, அதே பகுதியை சேர்ந்த வீரமணி மனைவி தேவிகா (43), வேங்கையன் மகன் நாகராஜன் (55), செல்வநாயகம் (75) ஆகிய 4 பேரும் சேர்ந்து விற்பனை செய்வதற்காக சாராயத்தை பதுக்கி வைத்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்த 1,000 லிட்டர் சாராயத்தையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com