நுங்கம்பாக்கத்தில் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பழக்கடை ஊழியர் சாவு

நுங்கம்பாக்கத்தில் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பழக்கடை ஊழியர் இறந்தார்.
நுங்கம்பாக்கத்தில் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பழக்கடை ஊழியர் சாவு
Published on

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் நாகரத்தினம் (வயது 33). இவர், வள்ளுவர்கோட்டம் நெடுஞ்சாலையில் உள்ள பழக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு தான் பணியாற்றிய கடைக்கு எதிர்புறம் உள்ள தனியார் அடுக்குமாடி வணிக வளாகத்தின் 3-வது மாடியில் உள்ள கழிவறைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராதவிதமாக நாகரத்தினம், கால் தடுமாறி 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், நாகரத்தினம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com