மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி

தியாகதுருகம் அருகே மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி
Published on

கண்டாச்சிமங்கலம்,

தியாகதுருகம் அருகே சிறுநாகலூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சந்தனகாப்பு மற்றும் மலர் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். தொடர்ந்து கூழ்குடங்களை ஊர்வலமாக பெண்கள் கோவிலுக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து அம்மனுக்கு கூழ் மற்றும் பொங்கல் படையலிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் அனைவருக்கும் பிரசாதமாக கூழ் பகிர்ந்து வழங்கப்பட்டது. பின்னர் இரவில் சாமி வீதிஉலா நடைபெற்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com