தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் அவர்களுக்கு ஆதரவாக அவரது மனைவி பிரிசில்லாபாண்டியன் வீடு வீடாகச்சென்று துண்டுப்பிரசுரம் வழங்கி பிரச்சாரம்

தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் அவர்களுக்கு ஆதரவாக அவரது மனைவி பிரிசில்லாபாண்டியன் வீடு வீடாகச்சென்று துண்டுப்பிரசுரம் வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டார்.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் அவர்களுக்கு ஆதரவாக அவரது மனைவி பிரிசில்லாபாண்டியன் வீடு வீடாகச்சென்று துண்டுப்பிரசுரம் வழங்கி பிரச்சாரம்
Published on

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணியில் எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் பெ.ஜான்பாண்டியன் அவர்களுக்கு அவரது மனைவியும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளருமான வழக்கறிஞர். திருமதி.ஜா.பிரிசில்லாபாண்டியன் அவர்கள் நேற்றைய தினம் மகளிரணி நிர்வாகிகளுடன் 107-வது வார்டு கிழக்கு ,மேற்கு பகுதியான வேம்புலியம்மன் குடியிருப்பு, வெங்கடாசலபதி 1-முதல் 3-வது தெரு, கந்தன் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, அப்பாராவ் தெரு, அவ்வைபுரம் ஜோதியம்மாள் நகர் முத்தியப்பன் தெரு அருணாச்சலம் தெரு முருகேசன் தெரு வைத்தியநாதன் தெரு கே.கே.கோவில் தெரு மனோகரன் தெரு மெக்னிக்கல்ஸ் ரோடு டோபிகானா பள்ளிக்கூட சாலை ஜகனாதபுரம் 1-வது முதல் 6-வது தெரு எம்.எஸ்.நகர் பிருந்தாவனம் தெரு முத்துமாரியம்மன் கோவில் தெரு மற்றும் மங்களாபுரம் 1-வது முதல் 18-வது தெரு போன்ற பகுதியில் வீதி வீதியாக சென்று பொது மக்களிடமும் , சாலையோர வியாபாரிகளிடமும் நடந்து சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பின்னர் ஒவ்வொரு தெருவிலும் வீடு வீடாகச் சென்று துண்டுப்பிரசுரம் வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்து, பூக்களைத் தூவியும் ,உற்சாக வரவேற்பு அளித்தனர்.... அதன் பிறகு அப்பகுதியில் உள்ள குறைகளை மக்களிடம் கேட்டறிந்தார்.நமது வேட்பாளர் அவர்கள் தங்களின் குறைகளை உங்களின் ஒருவராக நின்று கண்டிப்பாக நிறைவேற்றித்தருவர் என வாக்குறுதியளித்தார்.

உடன் பாரதிய ஜனதா கட்சி பட்டாளி மக்கள் கட்சி புரட்சி பாரதம் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், மகளிரணி மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com