வடலூர் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்

ஜவுளிக்கடை ஊழியர் கைது
வடலூர் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்
Published on

வடலூர்,

வடலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 18 வயது சிறுமி. கடலூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். அப்போது அதே ஜவுளிக்கடையில் ஊழியராக பணிபுரிந்த வடலூர் ஆபத்தாரணபுரம் அம்பேத்கர் நகரை சேர்ந்த நவீன்குமார் (வயது 23) என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது நவீன்குமார், சிறுமியிடம் உன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று சிறுமி நவீன்குமாரை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு நவீன்குமார் மறுத்து விட்டதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் வடலூர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, நவீன்குமாரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com