மரக்காணம் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

மரக்காணம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
மரக்காணம் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
Published on

விழுப்புரம்,

சிறுமி மாயம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கீழ்புத்துப்பட்டு பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுமியை கடந்த மாதம் முதல் காணவில்லை. பல இடங்களில் அவரை பெற்றோர் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அந்த புகாரில், தங்கள் மகளை உறவினரான செங்கல்பட்டு எம்.எம்.நகரை சேர்ந்த மோகன் மகன் கார்த்திக் (22) என்பவர் கடத்திச்சென்றிருக்கலாம் என கூறியிருந்தனர். அதன்பேரில், கடத்தப்பட்ட சிறுமியையும், அவரை கடத்திச்சென்ற கார்த்திக்கையும் தேடி வந்தனர்.

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

இந்நிலையில் நேற்று முன்தினம் செங்கல்பட்டு பகுதியில் கார்த்திக்கை போலீசார் மடக்கிப்பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் அந்த சிறுமியை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து கார்த்திக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறுமியை மீட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com