காஞ்சீபுரத்தில் பட்டப்பகலில் மூதாட்டியிடம் 3 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

காஞ்சீபுரத்தில் பட்டப்பகலில் மூதாட்டியிடம் 3 பவுன் தங்க சங்கிலி பறிப்பு சம்பவம் குறித்து மூதாட்டி யசோதா அம்மாள் பெரிய காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்தார்.
காஞ்சீபுரத்தில் பட்டப்பகலில் மூதாட்டியிடம் 3 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
Published on

காஞ்சீபுரம் பாண்டவ பெருமாள் கோவில் வடக்கு மாட வீதியில் வசிப்பவர் யசோதா அம்மாள் (வயது 62). இவர் அதே பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை திடீரென பறித்து சென்றனர். இதில் மூதாட்டி கூச்சலிடவே பொதுமக்கள் வருவதற்குள் அங்கிருந்து அந்த நபர்கள் தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து மூதாட்டி யசோதா அம்மாள் பெரிய காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, மர்ம நபர்களை தேடி வருகிறார். காஞ்சீபுரத்தில் இதற்கு முன்பு சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் அதிரடி நடவடிக்கையால் குறைந்து வந்தது. ஆனால் தற்போது பட்டப்பகலில் மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com