மயிலாப்பூரில் மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு

மயிலாப்பூரில் மூதாட்டியிடம் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் மின்னல் வேகத்தில் பறித்து சென்று விட்டனர்.
மயிலாப்பூரில் மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு
Published on

சென்னை மயிலாப்பூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ருக்மணி (வயது 75). இவர், நேற்று முன்தினம் இரவு பக்கத்து தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ருக்மணி கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்க சங்கிலியை மின்னல் வேகத்தில் பறித்து சென்று விட்டனர். இதுபற்றி மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com