விமானத்தில் கடத்திய ரூ.13.88 லட்சம் தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.13.88 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.
விமானத்தில் கடத்திய ரூ.13.88 லட்சம் தங்கம் பறிமுதல்
Published on

மங்களூரு: துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.13.88 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.

மங்களூரு விமான நிலையம்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பே பகுதியில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்துக்கு வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான விமானங்கள் வந்து செல்கின்றன. மேலும் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து மங்களூரு வரும் விமானங்களில் அடிக்கடி தங்கம் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன.

இதனை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை தீவிரமாக சோதனை நடத்தி வருகிறார்கள்.

ரூ.13.88 லட்சம் தங்கம் பறிமுதல்

இந்த நிலையில் நேற்று காலை துபாயில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று மங்களூருவுக்கு வந்தது. இதில் வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம் போல சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு பயணியின் நடவடிக்கையில் சுங்கத்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். மேலும் அவருடைய உடைமையை சோதனை செய்தபோது, அவர் தங்கத்தை கம்பளியில் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த நபரிடம் இருந்து ரூ.13.88 லட்சம் மதிப்பிலான 293 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் பஜ்பே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கைது

இதுகுறித்து பஜ்பே போலீசார், அந்த நபரை கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com