அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சங்கரன்கோவிலில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் யூனியன் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் வேல்ராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் பாலுச்சாமி, ராஜையா, மாரிச்சாமி, பாலசுப்பிரமணியன், சண்முகம், குருசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேல்தாய் நன்றி கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com