விளாத்திகுளத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல்; 300 பேர் கைது

விளாத்திகுளத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
விளாத்திகுளத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல்; 300 பேர் கைது
Published on

விளாத்திகுளம்:

விளாத்திகுளத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாலை மறியல்

விளாத்திகுளம் பழைய தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து அவர்கள் பழைய தாலுகா அலுவலகத்தில் இருந்து நடந்து சென்று விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகன், பொருளாளர் தமிழரசன், கோரிக்கை குறித்து பேசினர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கொரோனாவை காரணம் காட்டி பறிக்கப்பட்ட அகவிலைப்படி உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும். அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை, பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். 21 மாத ஊதிய நிலுவையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடந்தது.

கைது

மறியலில் ஈடுபட்ட 150 பெண்கள் உள்பட 300 பேரை விளாத்திகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

------------

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com