வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

புதுச்சத்திரம் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
Published on

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள நவணி எடையப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் கவியரசன் (வயது 24). எம்.சி.ஏ. பட்டதாரி.

கடந்த ஆண்டு பட்டப்படிப்பை முடித்த இவர் பல்வேறு இடங்களில் வேலைக்கு முயற்சி செய்தார். இருப்பினும் சரியான வேலை கிடைக்காத காரணத்தால் கடந்த 2 மாத காலமாக விரக்தியுடன் காணப்பட்டு வந்தார்.

தற்கொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தனது அக்காள் கிருபாவிடம் விஷம் குடித்து விட்டதாக கவியரசன் தெரிவித்து உள்ளார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கவியரசன் பரிதாபமாக இறந்தார்.

இந்த தற்கொலை சம்பவம் குறித்து கிருஷ்ணமூர்த்தி புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com