சேலையில் தீப்பிடித்து மூதாட்டி சாவு

திருவள்ளூர் அருகே சேலையில் தீப்பிடித்து பலத்த தீக்காயமடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
சேலையில் தீப்பிடித்து மூதாட்டி சாவு
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் ஏலம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பத்மாவதி (வயது 70). இவர் கடந்த 10-ந் தேதியன்று இரவு தன் வீட்டில் அவரது மகன் மனைவியுடன் தூங்கிக் கொண்டு இருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டதில், பத்மா சேலையில் தீப்பற்றி அவர் பலத்த தீக்காயமடைந்தார். அவர் கூச்சலிட்டதை கண்ட அவரது வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக தீயை அணைத்து அவரை திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்தநிலையில் பத்மாவதி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இச்சம்பவம் குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com