வாகனம் மோதி மூதாட்டி சாவு

பாவூர்சத்திரத்தில் வாகனம் மோதி மூதாட்டி இறந்தார்.
வாகனம் மோதி மூதாட்டி சாவு
Published on

பாவூர்சத்திரம்:

நெல்லை - தென்காசி சாலையில் பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகே 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மூதாட்டி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மூதாட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த மூதாட்டி யார்?, விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com