தஞ்சையில் கொரோனாவுக்கு மூதாட்டி பலி

தஞ்சையில் கொரோனாவுக்கு மூதாட்டி பலியானார்.
தஞ்சையில் கொரோனாவுக்கு மூதாட்டி பலி
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் நேற்று மேலும் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 475 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 139 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 65 ஆயிரத்து 305 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது மூதாட்டி பலியானார். இதன்மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 845 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,325 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com