குடும்பத் தகராறில் காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை

குடும்பத் தகராறில் காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குடும்பத் தகராறில் காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

சென்னை புரசைவாக்கம் பிரிக்ளின் சாலை பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 49). இவருடைய மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். பாலாஜி ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த பாலாஜி நேற்று முன்தினம் மதியம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தலைமை செயலக காலனி போலீசார், அவரது உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com