மாடியிலிருந்து தவறி விழுந்து கொத்தனார் பலி

மாடியிலிருந்து தவறி விழுந்து கொத்தனார் பலி.
மாடியிலிருந்து தவறி விழுந்து கொத்தனார் பலி
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் அண்ணாநகரை சேர்ந்தவர் இம்தாதுல்அக் (வயது 48). கொத்தனார். இந்த நிலையில் நேற்று முன்தினம் திருவள்ளூரை அடுத்த மணவாள நகரில் உள்ள ஒரு வீட்டில் இம்தாதுல்அக் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் மாடியிலிருந்து இறங்கி வரும்போது கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு, சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனில்லாமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

இச்சம்பவம் குறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com