வாழப்பாடி அருகே தலையை துண்டித்து பெண் படுகொலை மகன் வெறிச்செயல்

வாழப்பாடி அருகே தலையை துண்டித்து பெண் படுகொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மகனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வாழப்பாடி அருகே தலையை துண்டித்து பெண் படுகொலை மகன் வெறிச்செயல்
Published on

வாழப்பாடி:

வாழப்பாடி அருகே தலையை துண்டித்து பெண் படுகொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மகனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அடிக்கடி தகராறு

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள குறிச்சி ஊராட்சி பி.கண்ணுக்கானூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சாமிநாதன் (வயது 50). இவரது மனைவி பழனியம்மாள் (45). இவர்களுக்கு 3 மகள்களும், நித்யபிரசாத் (19) என்ற ஒரு மகனும் உள்ளனர்.

10-ம் வகுப்பு வரை படித்த நித்யபிரசாத் கடந்த 4 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு, அதற்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நித்யபிரசாத் தனது, தாய், தந்தையிடம் அடிக்கடி தகராறு செய்ததுடன், அவர்களை தாக்கி வந்ததாக கூறப்படுகிறது.

தலையை துண்டித்து கொலை

இதனிடையே அவர் நேற்று தனது தாய் பழனியம்மாளிடம் தகராறு செய்துள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. இதில் ஆத்திரம் அடைந்த நித்யபிரசாத் தனது தாய் பழனியம்மாளை கொடுவாளால் வெட்டினார். மேலும் தாயின் தலையை துண்டித்து கொலை செய்தார். இதில் ரத்த வெள்ளத்தில் பழனியம்மாள் உயிரிழந்தார். உடனே அங்கிருந்து நித்யபிரசாத் தப்பி ஓடிவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் வாழப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

வலைவீச்சு

மேலும் தலை துண்டித்து கொல்லப்பட்ட பழனியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நித்யபிரசாத்தை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com