போளூரில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

போளூர் தாலுகா அலுவலகம் முன்பு சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போளூரில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

போளூர்

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த களம்பூர் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வியாபாரிகள், சுமைதூக்கும் கூலித்தொழிலாளர்களின் கூலி உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தம் ஏற்படுத்திட சங்கங்களை அழைத்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று போளூர் தாலுகா அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் பழனி, சி.ஐ.டி.யு. தலைவர் ராமு ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் பொதுச்செயலாளர் சின்னசாமி, மாவட்ட தலைவர் முத்தையன் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்கள். பின்னர் கோரிக்கை மனுவை தாசில்தார் சண்முகத்திடம் வழங்கினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com