செங்கல்பட்டு அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கணவன்-மனைவி பலி

மதுராந்தகம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கணவன்-மனைவி பலியானார்கள்.
செங்கல்பட்டு அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கணவன்-மனைவி பலி
Published on

வீட்டின் சுவர் நனைந்து சேதம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஜமீன் எண்டத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வேதாச்சலம் (வயது 70). விவசாயி. இவருடைய மனைவி செந்தாமரை (65). இவர்களுக்கு 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள். வேதாச்சலம், செந்தாமரை இருவரும் குடிசை வீட்டில் வசித்து வந்தனர்.கடந்த சில நாட்களாக பெய்த மழையால் வேதாச்சலத்தின் குடிசை வீட்டை சுற்றி மழைநீர் தேங்கி இருந்தது. இதில் வீட்டின் சுவர் நனைந்து சேதம் அடைந்து இருந்ததாக கூறப்படுகிறது.

கணவன்-மனைவி சாவு

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல கணவன்-மனைவி இருவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை வேதாச்சலத்தின் இளைய மருமகள் மகேஸ்வரி காபி கொடுக்க சென்றபோது வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மாமனார் வேதாச்சலம், மாமியார் செந்தாமரை இருவரும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

சித்தாமூர் போலீசார் பலியான இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் நள்ளிரவில் அவர்களது வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கணவன்-மனைவி இருவரும் பலியானது தெரியவந்தது. மேலும் இதுபற்றி பாலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com