குடும்பத் தகராறில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை

குடும்பத் தகராறில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குடும்பத் தகராறில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

ராயபுரம்,

சென்னை புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்தவர் ராமு(வயது 37). இவர், ராயபுரம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு காமினி(32) என்ற மனைவியும், ஹாசினி(7), ஹர்சிகா(2) என 2 மகள்களும் உள்ளனர். போலீஸ்காரர் ராமுவுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் நள்ளிரவு வழக்கம்போல் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த போலீஸ்காரர் ராமு, வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தூக்கில் தொங்கிய ராமுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com